சென்னை.

மிழக அரசு விபத்தில் சிக்கியவர்களை  காப்பாற்றினால் ரூ.10000 வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது

நாடெங்கும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பலர், விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளனர்  எனவே. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி சாலை விபத்துகளில் சிக்கியவரை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்குவதோடு, சிறந்த காப்பாளர் விருதும் வழங்கப்படும் எனவும். ஒவ்வொரு ஆண்டும் 10 சிறந்த காப்பாளர்களுக்கு, மத்திய அரசின் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி புதுச்சேரி அரசு சாலை விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றி, உடனடியாக மருத்துவ வசதி கிடைக்க உதவுவோருக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது.

தமிழக அரசும் சாலை விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் சாலை விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் மத்திய அரசால் வழங்கப்படும் ரூ.5,000 தொகையுடன் மாநில அரசின் சார்பில் கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.