சென்னை: மருந்து, இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 12 வகையான தொழிற்சாலைகள் செயல்படுவதற்கான அனுமதியை அளித்துள்ளது தமிழக அரசு.

தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக தேசம் முழுவதற்குமான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாத மோடி அரசின் இந்த உத்தரவால், மக்கள் கடும் பொருளாதார இக்கட்டில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், 12 வகையான தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தமிழக அரசின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகளை இயக்க, அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உள்ளிட்ட 12 துறைகளைச் சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.