கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடி பரிசு வழங்கி கௌரவித்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ம் தேதி வரை நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.
மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் குழு பிரிவு என மூன்று பிரிவிலும் இவர் தங்கம் வென்றார்.
அன்மையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு ரூ. 5 கோடி பரிசுத் தொகை வழங்கி கௌரவித்தது.
இதையடுத்து கேரம் விளையாட்டில் வெற்றிபெற்ற வீரர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாய்; குழுபோட்டியில் தங்கம் வென்ற மித்ராவுக்கு ₹50 லட்சம்; குழு போட்டியில் ஒரு தங்கம் & இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளி வென்ற கே. நாகஜோதிக்கு ₹50 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.