சென்னை: தமிழ்நாட்டின் சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் அதிரடியாக  மின்கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவே பொதுமக்களுக்கு  சுமையை கூட்டியுள்ள நிலையில், தற்போது புதிய மின்இணைப்புக்கான கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தி  பொதுமக்களுக்கு மேலும் சுமையை கூட்டியுள்ளது.

தமிழ்நாட்டின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது  மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் வழியாகவும், தரைக்கு அடியில் கேபிள் வழியாகவும் மின்சப்ளை செய்யப்படும் பகுதிகளில் கட்டணங்கள் மாறுபடும் என தெரிவித்துள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு கட்டணம் ஆகிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தொரிவித்து உள்ளது.

அதன்படி , ஒருமுணை மின் இணைப்புக்கான பதிவு கட்டணம் ரூ.100 ஆக இருந்தது தற்போது ரூ.200 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.  அதுபோல மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.500 ஆக இருந்தது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600ல் இருந்து ரூ.750 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மின்சார இணைப்புக்கான வைப்புத்தொகை ரூ.300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது இதுமட்டுமின்றி மின்சார வாரிய வளர்ச்சி கட்டணம்-ரூ.1400 வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், அவை இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.2800 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் புதிய இணைப்பு வாங்க ஏற்கனவே ரூ.2800 அரசுக்கு பணம் கட்டிய நிலையில் தற்போது மொத்தம் ரூ.5050 செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.  அதாவது ரூ.2 ஆயிரத்து 250 கூடுதலாக கட்ட வேண்டும்.

அதுபோல மும்முனை மின் இணைப்பு பெறுவதாக இருந்தால்  பழைய கட்டணம் ரூ.5,150 ஆக இருந்தது. அற்போது, அதனுடன் 1 450 ரூபாய் உயர்த்தப்பட்டு  ரூ.6600 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

. பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் ஒரு முனை மின் இணைப்புக்கு பதிவுகட்டணம் ரூ.200 (பழைய கட்டணம் ரூ.100), இணைப்பு கட்டணம் ரூ.1000 (பழைய கட்டணம்  ரூ.500), மீட்டர் காப்பீடு ரூ.750 (பழைய கட்டணம்  ரூ.600), வளர்ச்சி கட்டணம் ரூ.7000 (பழைய கட்டணம்  ரூ.5000), வைப்புத் தொகை ரூ.300 (பழைய கட்டணம்  ரூ.200), மொத்தம் ரூ.9,250 செலுத்த வேண்டும். பழைய கட்டணம் ரூ.6,400. அதாவது ரூ.2,850 உயர்த்தப்பட்டு உள்ளது. மும்முனை மின் இணைப்பு கட்டணம் ரூ.9,600 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

அத்துடன் விரைவில் ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் ஒரு முனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக கூடுதலாக ரூ.5,200 வசூலிக்கப்படும் என்றும்  மும்முனை மின் இணைப்பாக இருந்தால் ரூ.7,100 கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் விநியோக பகுதியில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

மீட்டர் பழுதானாலோ, எரிந்து போனாலோ மீட்டரை மாற்றும் கட்டணம் ஒரு முனை மின் இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

மும்முனை மின் இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உயர் அழுத்தப் பிரிவில் மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

நல்ல நிலையில் இருக்கும் ஒரு முனை மின் இணைப்பு மீட்டரை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி வைப்பதற்கான கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

எரிந்தோ பழுதுபட்டோ போகும் மின் மீட்டர்களை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

தற்காலிகமாக மின் இணைப்பை இடம் மாற்றி வைப்பதற்கான கட்டணமும் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில் மின் வாரியம் கையாளும் அனைத்து விதமான சேவைகளின் கட்டணமும் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

https://tangedco.blogspot.com/2022/09/2022.html?fbclid=IwAR3BDVn0y0fZOo61mI9vWmJKl93kgW3phowbboRK3nP8Hfn-HWwdqyG48UM