டில்லி,

விவசாயிகள் பிரச்சினைகளில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம், தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகள் மரணம் தொடர்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் விவசாயிகள் பிரச்சினையில் அக்கறை காட்டாத தமிழக அரசை கடுமையாக சாடினார்.

மேலும், விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு மெத்தன போக்கை கடைப்பிடிக்கக் கூடாது; மாநில அரசு அமைதி காப்பது சரியான அணுகுமுறை அல்ல.

விவசாயிகளின் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்

விவசாயிகள் தற்கொலை தடுப்பு நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும், என்று  உத்தரவிட்டனர்.

மேலும், விவசாயிகளின் தற்கொலை வருத்தமளிக்கிறது என உச்சநீதிமன்றம்  வேதனை தெரிவித்துள்ளது.