டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கோரி அரசு மேல்முறையீடு

Must read

சென்னை,

மிழ்நாட்டில் புதியதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக சுமார் 2000 மதுக்கடைகள் திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரச மேல்முறையீட்டு மனுவில் கூறி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் காரணமாக நெடுஞ்சாலையில் இருந்த கடைகளை அருகில் இருந்த கிராமத்துக்குள் மாற்றியது தமிழக அரசு. நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகே 500 மீட்டர் தூரத்துக்கு மதுபான கடைகள் செயல்படக்கூடாது. ஏற்கனவே இருக்கின்ற மதுபான கடைகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 31-ந் தேதி உத்தரவிட்டது.

இதன்படி தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகே இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் இழுத்து மூடப்பட்டன.

இந்த கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் தாண்டியும், குடியிருப்பு பகுதிகளிலும் திறக்க டாஸ்மாக் நிறுவனம் முயற்சித்து வருகிறது. நெடுஞ்சாலை அருகே உள்ள கிராம பகுதிகளுக்குள் மாற்றியது தமிழக அரசு.

இதன் காரணமாக பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். மதுக்கடைகளை அடித்து உடைத்தனர்.

இந்நிலையில்,  அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராம மக்கள் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து  அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

More articles

Latest article