சென்னை,

ன்னிய செலாவணி மோசடி வழக்கு காரணமாக சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் இன்று மீண்டும் எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் ஆஜரானார்.

ஜெ. ஜெ. டிவிக்கு கருவிகள் வாங்கிய விவகாத்தில் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் 2வது முறையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

அவர் ஏற்ககனவே ஜெயா டிவியில் பொறுப்பாளராக இருந்தார். 1996-97ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியபோது  மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது குறித்து அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.

அதைத்தொடர்ந்து கடந்த 4ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் பாஸ்கரன்  ஆஜரானார். அதைத் தொடர்ந்து இன்றைய விசாரணையின்போது அவர் மீண்டும் ஆஜராகி உள்ளார்.