டெல்லி :
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த் தங்க மகன்  மாரியப்பன் தாயகம் திரும்பினார்.  அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
maripapan
பிரேசில்  ரியோடிஜெனிரோ  நகரில் நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான  15வது பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற 19 வீரர்களில்  4 பேர் பதக்கம் வென்றனர். இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் 43வது இடத்தை பிடித்தது.
 
இந்த பாராலிம்பிக் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த  வீரர் மாரியப்பன், உயரம் தாண்டுதல் போட்டியில், 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
அதேபோல், உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த மற்றொரு இந்திய வீரர் வருண் சிங், வெண்கலம் வென்றார்.  ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தேவேந்திரா தங்கமும், பெண்களுக்கான குண்டு எறிதலில் தீபா மாலிக் வெள்ளி பதக்கங்களையும் பெற்றனர்.
இதையடுத்து நடைபெற்ற பாராலிம்பிக் நிறைவு விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மாரியப்பன் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தார்.
பாரரிலிம்பிக் போட்டிகள் நிறைவுற்ற நிலையி, தமிழகத்தின் ‛தங்கமகன்’ மாரியப்பன்,உள்பட பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைவரும் இந்தியா திரும்பினர். டில்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் விஜய் கோயல் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு விருது  கொடுத்து வரவேற்றார்.
இதுகுறித்து  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாரிப்பன்,  ‛வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்காகவும், தமிழ்நாட்டில் விளையாட்டு அமைப்பை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு பயிற்சி தர வேண்டும்” எனவும் கூறினார்.
மத்திய அமைச்சர் விஜய் கோயல் பேசுகையில்: ‛‛ அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகளுக்காக இளைஞர்களை தயார் படுத்துவதே விளையாட்டு அமைச்சகத்தின் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது” என கூறினார்.