சென்னை

கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடெங்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.   நேற்று பிரதமர் தனது உரையில் மத்திய அரசே கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் 75% வரை கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக அளிக்கும் என அறிவித்தார்.  அதைத் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

’தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விரிவாக்கமாக நான் சில அடிப்படை கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.  தற்போது கொரோனா தடுப்பூசி உற்பத்தி இருமுனையாக மட்டுமே உள்ளதால் ஒரு நிலையற்ற தன்மை உள்ளது.  இதை 3 அல்லது 4 முனையாக விரிவிக்கா வேண்டும்.   தற்போதுள்ள நிலையில் இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே கொள்முதல் செய்வதால் தேவை மற்றும் விநியோகத்துக்கு இடையே பெரும் இடைவெளி உள்ளது.

மத்திய அரசு உள்நாட்டில் உற்பத்தி ஆகும் தடுப்பூசிகளில் 100% கொள்முதல் செய்து அவற்றை அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை மற்றும் கொரோனா பரவலின் அடிப்படையில் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளை அவரவர் மாநில அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும்.    மாநில அரசுகளால் நேரடியாகத் தடுப்பூசி கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளதால் பிரதமர் நிஅனிக்கும் வேகத்துக்குச் செயல்பட முடியவில்லை.   ஆனால் ஆயிரக்கணக்கில் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல்  செய்ய முடிகிறது.

உலகில் பல அரசுகள் தற்போது கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் கடும் முனைப்புக் காட்டும் நிலையில் உள்ளதால்  மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியில் 100% அளவை கொள்முதல் சேயும் நடவடிக்கை உலக அளவிலான முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு நாட்டின் மீது ந்மபிக்கையை அளித்து நாட்டுக்கு மேலும் முதலீடுகள் கிடைக்கும்.

சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் பொறுப்பு என பிரதமர் பலமுறை கூறுவதை நான் கவனித்துள்ளேன்,    எனவே சுகாதாரக் கல்வி என்பதும் சுகாதார அமைப்புடன் இணைந்துள்ள மருத்துவமனைகள் அனுபவம் மூலம் பெறமுடியும் என்பதால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.  மாநில அரசுகள் தங்களது சுகாதாரத்துறைகள் மூலம் தேர்வுகள் நடத்தி மாநில அரசுகளின் பொறுப்பை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்”

எனப் பதிந்துள்ளார்.