சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17ந்தேதியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டு ( 2026) நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் ‘சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்’ (Special Intensive Revision) நிறைவடைந்துள்ள நிலையில் , இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்கு 2025 டிசம்பர் 19ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. உயிரிழந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அதன்படி சுமார் 97 லட்சம் பேர் விடுபட்ட நிலையில், தகுதியான வர்கள் விண்ணப்பிக்க, பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான கடந்த இரு மாதங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட 34.75 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது வரை 90 சதவீத விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளதாகவும் தேர்ல் ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 17 அன்று அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
[youtube-feed feed=1]