பெங்களூரு

ர்னாடகா அரசு காவிரி நதியின் குறுக்கே புதிய மின் திட்டம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.  இது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை கர்னாடகா தராமல் உள்ளது.   இது குறித்து நேரில் சந்தித்து பேச நேரம் ஒதுக்குமாறு தமிழக அரசு கர்னாடகா முதல்வருக்கு கடிதம் அனுப்பியது.   ஆனால் கர்னாடகா முதல்வர் சித்தராமையா நேரம் ஒதுக்கவில்லை.   இதனால் கர்னாடகா தங்களை வஞ்சிப்பதாக தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது காவிரி நதியின் குறுக்கே புதிய மின் திட்டப் பணிகளை தொடங்க கர்னாடக அரசு முயலுவதாக செய்திகள் வந்துள்ளன.   சிவசமுத்திரத்தில் ரூ. 893.65 கோடி ரூபாய் செலவில் இந்த மின் திட்டத்தை கர்நாடகா செயல் படுத்த உள்ளது.   இன்னும் 4 ஆண்டுகளில் முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கோரி இருக்கிறது.

தமிழக விவசாயிகள் கர்னாடகாவின் இந்த நடவடிக்கையால் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.