திருச்சி: இன்று  திருச்சி அருகே ல் அருகே  நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள  234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார்  அக்கட்சி தலைவர் சீமான்.

நாம் தமிழர் கட்சி சார்பில்,  திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்  ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ இன்று  நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது

திருச்சியை அடுத்த ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு இன்று நடக்கிறது.   மாநிலம் முழுவதும் இருந்து சுமார்   இரண்டரை லட்சம்  பேர் கலந்துகொள்ளும் வகையில், இருக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள், முதியோர் அமர தனி இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில்  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்,  நா.த.கவின்  234 வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்து வைக்கிறார். அதாவது,  தமிழகத்தின் 234 தொகுதிகளில் நாதக கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்த  வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்துகிறார். 234 தொகுதிகளில் 117 ஆண்கள்,117 பெண்கள் எனச் சம வாய்ப்புடன் வேட்பாளர்களை அவர் களமிறக்க உள்ளார்.

சீமான் தனது சொந்த மாவட்டமான காரைக்குடி தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்யாராணி மேட்டூரிலும், இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யத்திலும், இயக்குநர் களஞ்சியம் ஆயிரம் விளக்கிலும் போட்டியிட உள்ளனர்.

மேலும், நட்சத்திரப் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல், மாநிலம் முழுவதும் சீமானுக்காக பரப்புரை செய்யப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம்தமிழர் கட்சி கடந்த  2010 மே 18ந்தேதி  அன்று திரையுலகைச் சேர்ந்த நடிகர் மற்றும இயக்குனர்  சீமானால் தொடங்கப்பட்டது. இக்கட்சியை ஏற்கனவே தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி. பா. ஆதித்தனார் நடத்தி வந்த  நிலையில், அவரது மறைவுக்கு பிறகு, கட்சி செயல்படாமல் இருந்தது. அதை சீமான் பெற்று, அதன்பெயரிலேயே கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

இக்கட்சி 2016ம் ஆண்டு  முதல் தேர்தல் களத்தில் பயணித்து வருகிறது. இதுவரை எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறது.  சீமானின் ஆக்ரோஷமான  மற்றும்அதிரடியான பேச்சுக்களால் கவரப்பட்ட பல ஆயிரம் இளைஞர்கள் அவரது கட்சியில் இருந்து வந்தாலும், திடீரென திடீரென சீமானின் உளறல் பேச்சுக்கள் மக்களிடையே அவர்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி வருகிறது. இதனால், நாம் தமிழர்  கட்சியின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட அளவே இருந்து வருகிறது.

2016 சட்டமன்றத் தேர்தல்: 1.07% வாக்குகள் பெற்ற நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தல்: 3.9% ஆக அதிகரித்தது. பின்னர், அது   2021 சட்டமன்றத் தேர்தலில் மேலும் உயர்ந்து,  6.58% ஆக அதிகரித்த நிலையில்,  2024 நாடாளுமன்றத் தேர்தல்: 8.2% ஆக உயர்ந்துள்ளது. இது 2026 சட்டமன்ற தேர்தலில் மேலும் அதிகரிக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

[youtube-feed feed=1]