மதுரை:
தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக மின்வாரியத்தல் காலியாக இருந்த 375 உதவி பொறியாளர்கள் பணியிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டது. இதில் வெளி மாநிலத்தை 36 பேர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப் படுகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பணியில் சேர்ந்த வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் உச்சநீதி மன்ற உத்தரவு படியே சேர்ந்ததாகவும், அவர்கள் இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொள்ளவில்லை என்றால் வேலை வாய்ப்பை இழப்பார்கள் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதி மன்றத் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, தமிழக மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தவரை சேர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் இறுதி முடிவு நீதிமன்ற உத்தரவிற்கு உட்பட்டது என்றும் தெரிவித்து உள்ளது.