திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ளே சுங்கச்சாவடியில் காவல்துறை உதவியுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிர் நடத்திய வாகன சோதனையின் போது பணத்துடன் வந்த அதிகாரி சிக்கினார்.

மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த அந்த அமலாக்கத்துறை அதிகாரியின் பெயர் அங்கித் திவாரி என்றும் வழக்கு தொடர்பாக மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியை திண்டுக்கல் EB காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ள காவல்துறையினர் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.