சென்னை : தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.
தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சக்கட்டத்தில் உள்ளது. இன்று மட்டும் புதியதாக 1562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33229 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 1,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 134 பேருக்கும், திருவள்ளூரில் 57 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 23,298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 1988 பேரும், திருவள்ளூரில் 1386 பேரும், காஞ்சிபுரத்தில் 534 பேரும், கடலூரில் 491 பேரும், அரியலூரில் 381பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் முழு விவரம் வருமாறு: