சென்னை:
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனை யில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுகவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், ஓபிஎஸ், முழு உடல் பரிசோதனைக்காக தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவ மனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை திடீரென அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையில், மதிய வேளையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார். இதனால் ஓபிஎஸ்க்கு என்ன ஆனது என கேள்விகள் எழுந்தன. பரபரப்பும் எகிறியது.
இந்த நிலையில், எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம், துணைமுதல்வர் ஓபிஎஸ் உடல்நலம் குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது.
அதில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை மருத்துவமனை மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து வருகின்றனர். அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்து உள்ளது.