தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக அதிகரித்தது.

Must read

சென்னை

மிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  ஆயினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா 3 ஆம் இடத்தில் உள்ளது.  இங்கு இதுவரை 20 லட்சத்துக்கும் மேல் பாதிப்பு அதிகரித்து 41.700க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவில் மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் மரணமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதாவது 2.05% ஆக உள்ளது.   இதைப் போல் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தற்போது குணமடைவோர் விகிதம் 68% ஆக அதிகரித்துள்ளது.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இங்கு இன்றுவரை 2.85,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளன்ர்.  இதுவரை 4690 பேர் உயிர் இழந்துள்ளனர்  இன்றுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2.27, 575 ஆகும்.  இது அகில இந்திய அளவை விட அதிகமாக அதாவது 79.84% ஆக உள்ளது.

More articles

Latest article