சென்னை

மிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  தற்போது கொரோனா பரவல் குறநிது வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.  மேலும் கொரோனா  பரவல் குறைந்து வரும் பொழுதும் உருமாறி உள்ள கொரோனாவான ஒமிக்ரான் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.   தமிழகத்தில் கொரோனா குறித்த ஊரடங்கு வரும் 15 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இதையொட்டி தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வருடன் தமிழக உயர் அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இந்த கூட்டத்தில் பங்கு பெற உள்ள தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் முதன்மை செயலர், சுகாதார செயலர் ஆகியோரின் யோசனைப்படி முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.