சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி செய்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது திமுக சார்பில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் தமிழகம் முழுவதும் இருந்து புகார்கள் பெறப்பட்டன. இந்த புகார் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி பதவி ஏற்றதும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. அதற்கான சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார், தற்போது பெறப்பட்ட மனுக்களை வலைத்தளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது பெறப்பட்ட  4 இலட்சம் மனுக்களில் 70000 மனுக்கள் TNeGA வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பயனாளிகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. இதில், 549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டிருக்கிறது. பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினேன்!” என ஸ்டாலின் டிவிட் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  சென்னை தண்டையார்ப்பேட்டையை சேர்ந்த  சுமதி என்ற பெண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் தையல் இயந்திரத்தை வழங்கி உள்ளார்.

[youtube-feed feed=1]