தருமபுரி கோயில் பூட்டை உடைத்த விவகாரம்… பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது

Must read

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழனன்று பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாத கோயிலுக்கு கே.பி. ராமலிங்கம் சென்றபோது கோயில் பூட்டிய நிலையில் இருந்துள்ளது.

கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சையான நிலையில், காவல் துறையினரும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் அவர்களை வெளியில் இருந்து வழிபாடு செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

இவர்களின் அறிவுறுத்தலை மீறி பூட்டை உடைத்து கோயிலுக்குள் சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கே.பி. ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கோயில் பூட்டை முன்னின்று உடைத்த பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

More articles

Latest article