சென்னை

ன்று தொடங்கி உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவித்திருந்தது.   இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர்  ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது.

தமிழக அரசு இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மற்றும் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்படும் என அறிவித்திருந்தது.  இந்த கூட்டத் தொடர் முழுவதும் நேரலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

அதை ஏற்றுக் கொண்ட அரசு ஆளுநர் உரை மட்டுமின்றி இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும் என அறிவித்துள்ளது.  இந்த நேரலையை Tamil Nadu Government TACTV channel-1 என்னும் தளம் மூலமாக நேரில் காணலாம்

மற்றும் யூ டியூபில் https://www.youtube.com/watch?v=PQrJ6Na21-I  என்னும் அலைவரிசையிலும் பார்க்க முடியும்.