சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.  பேரவை நிகழ்வுகள் தொடங்கியது, சபாநாயகர் அப்பாவு மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார்.

மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்படி,  தேமுதிக தலைவர் விஜயகாந்த், மறைந்த உறுப்பினர்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ்.ராஜசேகரன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத், முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உள்ளிட்டோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

 விஜயகாந்துக்கு சட்டப்பேரவையில் ர் புகழாரம் சூட்டிய சபாநாயகர் அப்பாவு,   கேப்டன் என்று புகழ் பெற்றவர் என்றும், அவர்  பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்றவர் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.