சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், தற்போதைய தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் பதவி விலகினார்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி பிடித்துள்ளது., திமுக நேரடியாக 125 இடங்கள் முன்னிலையில் உள்ள நிலையில் தனி பெரும்பான்மையுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைத்து, முதல்வராகவரும் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறார்.

பொதுவாக அரசு வழக்கறிஞர்களாக பதவி ஏற்கும் கட்சி, அவர்களின் ஆதரவாளர்களை நியமனம் செய்வது வழக்கமான நடைமுறை. தற்போது திமுக ஆட்சி அமைக்க உள்ளதால், அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் பதவி விலகியுள்ளார். அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் அரசுக்கு அனுப்பி உள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் சோமசுந்தரம் பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.