சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தோல்வி அடைந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால், ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுக, வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்க உள்ளது. முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்கிறார்.

இந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.