சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார் தங்கர் பச்சான், அப்படத்திற்கு ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தங்கர் பச்சான். இசை – தரண்குமார். ஒளிப்பதிவு – பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் படத்தொகுப்பு – சாபு ஜோசப், கலை – சக்தி செல்வராஜ், நடனம் – தினேஷ், சண்டைப்பயிற்சி – ஸ்டன்ட் சில்வா தயாரிப்பு நிறுவனம் – பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என முன்னணி படக்குழுவினர் படத்தின் வேலைபாடுகளில் மும்மரமாக உள்ளனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.