ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிரஞ்சீவி , அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படத்தை பார்க்க நடிகர் சிரஞ்சீவி தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழிசை சௌந்தராஜனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்றுக் கொண்ட தமிழிசைக்கு, படத்தை காண்பித்திருக்கிறார்கள். படத்தை பார்த்த தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் சிரஞ்சீவியை பாராட்டியுள்ளார்.