பத்மஸ்ரீ விருது பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்நலக்குறைவால் காலமானார் . அவருக்கு வயது 69 .

கத்ரி கோபால்நாத் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக மங்களூரில் காலமானார்.

இவரின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு 2004-ல் பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்தது. சாக்சபோன் மேதை கத்ரி கோபால்நாத்துக்கு தமிழக அரசும் கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்தது. சாக்சபோன் சக்ரவர்த்தி, சாக்சபோன் சாம்ராட், கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார்.