‘கும்கி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி மேனன் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து சில நாள் தன திரையுங்க பயணத்தை தக்கவைத்து கொண்டவர் .

பின் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தியவர், படிப்பு முடிந்ததும் உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் இறங்கினார். ஆனால், அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் ‘யங் மங் சங்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் லட்சுமி மேனனுக்கு, தற்போது எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காததால் அவர் கல்யாணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவரது பெற்றோர் அவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.