டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று 3வது நாளாக இரு அவைகளிலும் கூச்சல் குழக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை மீண்டும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு அவைகளும் மதியம் 2 மண வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிற்பகல் மாநிலங்களவை மீண்டும் கூடியது. அப்போது, மத்திய தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பெகாசஸ் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கைiய பிடுங்கி திரிணாமுல் எம்.பி சாந்தனு சென் கிழித்து எறிந்தார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம், கொரோனா உயிரிழப்பு மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை போன்றவை குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற பணிகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் இன்று 3வது நாளாக முடங்கி உள்ளன.
இன்று காலை மாநிலங்களவை நடவடிக்கைகள் அமளி காரணமாக மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், மதியம் 2 மணிக்கு சபை கூடியதும், மத்திய தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பெகாசஸ் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய முன்வந்தார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்அறிக்கையை வெளியிட அமைச்சரரை அனுமதிக்கவில்லை. அவையில் கடும் அமளி ஏற்பட்டது.பெருத்த கூச்சலும், குழப்பமும் நிலவியது. இருந்தாலும் அமைச்சர் அறிக்கையை வாசித்து வந்தார்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென், திடீரென தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவினிடம் இருந்து அறிக்கையை பறித்து, கிழித்து எறிந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. திரிணாமுல் எம்.பி.யின் அநாகரிக நடவடிக்கையை பாஜக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்த அறிக்கையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு சற்று முன்னர் இதுபோன்ற விவகாரம் பேசப்படுவது, இந்திய ஜனநாயகத்தின் பெயரை களப்படுத்தும் சதி திட்டம் நாட்டில் ஏற்கனவே கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு முறைமை இருக்கும் போது சட்டவிரோத கண்காணிப்பு சாத்தியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.