டில்லி

ன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மிகப் பெரிய மற்றும் பழமையானது இந்திய ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை ஆகும்.    இந்த தொழிற்சாலைகளை ராணுவத் தளவாட தன்னாட்சி பொறுப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்த 100% அரசுக்குச் சொந்தமான கார்ப்பரேட் நிறுவனமாக மாற்ற அல்லது நிறுவன சட்டத்தின் கீழ் இதையும் ஒரு நிறுவனமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ராணுவ ஊழியர் சங்கங்கள் இந்த முடிவுக்கு எதிராகக் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு நோட்டிஸ் அளித்துள்ளன.  இந்த வேலை நிறுத்தம் ஜூலை 26 முதல் ஆரம்பமாக உள்ளது.    இன்று அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா 2021 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இது பாதுகாப்புத் துறையில் வேலை நிறுத்தத்தைத் தடை செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

அது மட்டுமின்றி வேலை நிறுத்தம், போராட்டம் போன்றவற்றில் இத்துறையினர் ஈடுபட்டால் பணி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.  மேலும் இந்த மசோதா சட்டவிரோத வேலைநிறுத்தங்கள், அதைத் தூண்டுதல் மற்றும் அதற்கு நிதியுதவி வழங்குதல் போன்றவற்றிற்கு அபராதம் விதிக்கவும் மத்திய அரசுக்கு  அதிகாரம் அளிக்கிறது.