சென்னை: அதிமுக கூட்டணியில், பாஜகவின் தாமரை சின்னத்தில் 5 இடங்களில் போட்டியிடும், தமாகவின் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார் தமாக தலைவர் ஜிகே வாசன்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ளது. வரும் 30ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது.
அதன்படி, ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை, ஒட்டன்சந்திரம், ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளின் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்டிச தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். அதன்படி,
ராணிப்பேட்டை தொகுதியில் கார்த்திகேயன்
ஈரோடு மேற்கு தொகுதியில் யுவராஜா
கும்பகோணம் தொகுதியில் அசோக்குமார்
ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகர்
கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன்
ஆகியோர் .வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த அறிவிப்புக்கு முன்னதாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
[youtube-feed feed=1]