கொல்கத்தா

ந்துக்களை இணைக்கும் ராம நவமி என்னும் பெயரில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்தனியே ஸ்ரீராமநவமி கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகின்றன.

இன்று நாடெங்கும் ஸ்ரீராம நவமி வெகு சிறப்பாக இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.   இந்து அமைப்பினர் வடநாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீராமநவமியை தற்போது மேற்கு வங்கத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.    இன்றைய கொண்டாட்டங்களை ஒட்டி மாநிலம் முழுவதும் உள்ள பகுதிகளில் சிறப்பாக ஊர்வலங்கள் நடத்தப் பட்டு வருகின்றன.

கொல்கத்தா நகரிலும் மாநிலத்தின் பல இடங்களிலும் இந்து அமைப்புகள் பலவும் காவிக் கொடிகளுடன் ஸ்ரீராம நவமியை சிறப்பாக கொண்டாடி வருகின்றன.    அவர்களுடன் மத்தியில் ஆளும் பாஜகவினரும் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்.  இது குறித்து, “மாநிலம் எங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீராம நவமி நிகழ்வில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை.   பேரணிகளும் ஊர்வலங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.   இந்துக்களுக்கு எதிரான திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக இந்துக்களை இணக்கும் ராமநவமியாக இந்த வருடம் நிகழ்கிறது” என மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறி உள்ளார்.

அதே போல ஆளும் கட்சியான திருணாமூல் காங்கிரசும் மாநிலம் எங்கும் ஸ்ரீராம நவமியை கொண்டாடி வருகிறது.  ஏற்கனவே ஸ்ரீராம நவமியை தங்கள் கட்சி விமரிசையாக கொண்டாடும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.  அதன் படி பல இடங்களில் பேரணிகளும் ஊர்வலங்களும் அக்கட்சி நிகழ்த்தி வருகிறது.   இந்தக் கட்சியும் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மக்களையும் இணைக்கும் ராமநவமியாக  கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.