திருவாரூர்:

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.   தேர்தலில் போட்டியிட இதுவரை 2 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.

கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி வரும் 28ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நேற்று முதல் (3ந்தேதி) வேட்பு மனுதாக்கல் தொடங்கி உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள்

இந்த நிலையில் 2 சுயேச்சைகள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், இவர்கள் இருவரும் எந்த வொரு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அங்கு சென்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள்.

ஒருவர் தேர்தல் மன்னன் பத்மராஜன். இவர் சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்தவர்.

மற்றொருவர்  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன்.

இவர்கள் 2 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். குறிப்பிட்ட இந்த இரண்டு பேரும் வார்டு கவுன்சிலர்கள் தேர்தல் முதல் குடியரசு தலைவர் தேர்தல் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்வோம் என்றும் தெரிவித்து உள்ளனர்.