சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்  தீபத்திருவிழாவையொட்டி, வரும் 27ந்தேதி கொடியேறுகிறது. 10நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இறுதி நிகழ்ச்சியாக டிசம்பர் 6-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.  தீபத்திருவிழாவில் சுமார் 50லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாக, அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் மாவட்ட நிர்வாகத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில்,   திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு  இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், அரசுத்துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 27ந்தேதி கொடியேறுகிறது…