திருவண்ணாமலை:
வரும் 7ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்டஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பவுர்ணமிதோறும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது இந்துக்களின் வழக்கம். அன்றைய தினம் லட்சகணக்கானோர் திருவண்ணாமலையில் கூடி, பவுர்ணமி இரவில் மலையை சுற்றி வருவர்.
தற்போது கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், இந்த மாதம் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel