திருவள்ளூர்: பிறந்த குழந்தை, கொன்று குப்பையில் வீசப்பட்ட கொடுமை!

Must read

 
அத்திப்பட்டு:
பிறந்த  பச்சிளம் குழந்தையை கொலை செய்து  குப்பைதொட்டியில் வீசப்பட்ட கொடூரம்  திருவள்ளுர் அருகே நடந்துள்ளது. அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தையின் உடல் கிடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு ரயில்நிலையம் அருகேயுள்ள குப்பை தொட்டியில் இறந்த நிலையில் ஆண்குழந்தையின் சடலம் கிடந்தது.  இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மீஞ்சூர் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.
babyஆனால்,  காவல்துறையினர், குப்பை தொட்டியில் இறந்த  குழந்தையை பார்த்துவிட்டு, மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள், காவல்துறை மேலதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரின் இரக்க மற்ற செயலையும் கண்டித்தனர்.
இதையடுத்து மீண்டும் வந்த காவல்துறையினர், குழந்தையின்  உடலை குப்பை தொட்டியில் இருந்து வெளியே எடுத்து பார்த்தனர்.
அந்த குழந்தை,  பிறந்த சில மணி நேரமே ஆன அந்த குழந்தை.  தொப்புள்கொடி கூடி அறுக்கப்படாமல், குழந்தையின் கழுத்தில் பாவாடை நாடாவால் இறுக்கி இருந்ததும் தெரிய வந்தது.
யாரோ மர்ம நபர்கள் குழந்தையின்  கழுத்தை பாவாடை நாடாவால் இறுக்கி கொலை செய்து தூக்கி வந்து குப்பை தொட்டியில் வீசியிருப்பது தெரியவந்தது.
குழந்தையை கொன்றது யார், குழந்தையின் பெற்றோர் எங்கே என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

More articles

Latest article