திருப்பூர்:
மிழகத்தில் வரும் 7ந்தேதி (நாளை மறுதினம்) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை  வெளியிட்டு உள்ளார். சமூக விலகலை கடைபிடிக்கும் நோக்கில், மதுபானம் வாங்க வருபவர்கள், குடை பிடித்து வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கேரளாவில்  குடை மூலம் சமூக விலகல் கடைபிடிக்கப் பட்டது. அதுபோல  தமிழகத்திலும் குடை பிடிக்கும்  நடைமுறையை தமிழகஅரசு கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இநத நிலையில், தமிழகஅரசு சில கட்டுப்பாடுகளுடன் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. நாளை மறுதினம் திறகப்பட உள்ள டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நோக்கிலும், அவர்கள் சமூக விலகளை கடைபிடிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் வரும் 07.05.2020 முதல் மதுபானக் கடைகள் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் (containment zones ) உள்ள மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.  நோய் கட்டுப்பாடு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக் கடைகள் மட்டும்  07.05.2020 முதல் திறக்க கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், மதுபானம் வாங்க வருபவர்கள் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் , கூட்டம் சேர்க்கக் கூடாது என்பதோடு குடையுடன் வந்து , குடைபிடித்து நின்றால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்றும், இல்லையெனில் மதுபானம் வழங்கப்படாது என்று அறிவுறுத்தியுள்ளது.