சென்னையில் 2000ஐ கடந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: மக்கள் அதிர்ச்சி

Must read

சென்னை: சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலால், தினமும் ஏராளாமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இப்போது, கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
நேற்று மட்டும் தமிழகத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. ஒட்டுமொத்தமாக 3 ஆயிரத்து 550 ஆக  இருந்தது. இந் நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4058 ஆக உயர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது. சென்னையில் இன்று மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

More articles

Latest article