சென்னை:

த்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் (எஸ்எஸ்எல்சி) இன்று வெளியான நிலையில், திருப்பூர் மாவட்டம் 98.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்ச்சியிலும் 95.37 சதவிகிதம் பெற்று தமிழகத்திலேயே முதலிடத்தை பிடித்த நிலையில், தற்போது 10வது வகுப்பு தேர்விலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. சுமார்  10 லட்சம் மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தத்தில்  95.2 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.  இவர்களில் மாணவிகள்  97 சதவீதமும்,  மாணவர்கள்- 93.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் திருப்பூர் கல்வி மாவட்டம் முதலிடத்தை தட்டிச்சென்றுள்ளது. அங்கு  98.53% மாணவ மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாவது இடத்தை 98.48% தேர்ச்சியுடன்   ராமநாதபுரம் கைப்பற்றியுள்ளது.  3வது இடத்தை 98.45 சதவிகிதத்துடன் நாமக்கல் மாவட்டம் பிடித்துள்ளது.

6100 பள்ளிகள்  100% தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் அரசுத்தேர்வுத்துறை இயக்குநரகம்  அறிவித்து உள்ளது.