சென்னை:

மிழக மாணவ மாணவிகள் எதிர்பார்த்திருந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியானது. மொத்தத்தில்  95.2 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், இவர்களில் மாணவிகள்  97 சதவீதமும்,  மாணவர்கள்- 93.3 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. சுமார்    9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் தேர்வை எழுதி இருந்தனர்.

இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று தமிழக அரசின்  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மொபைல் எண் பதிவு செய்துள்ளவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

வரும் 2ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என்றும் மே 6ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.