Skip to content
  • Wed. Sep 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

சென்னையில் இந்த ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Sep 11, 2020

சென்னை: சென்னையில் வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி திருப்பதி திருக்குடை ஊர்வலம், இநத் ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்காக இணையதளத்தில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இருந்து இரண்டு வகையான மங்களப்பொருள்கள், ஆண்டுதோறும் திருமலையில் சமர்ப்பிக்கப்படு கின்றன. ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, மற்றொன்று தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள். பல நூற்றாண்டு பாரம்பரியமாக, திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்து தர்மார்த்த சமிதி வழங்கும் திருக்குடைகளை ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.வரும் 22-ந்தேதி, தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளி யிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில், மத்திய, மாநில அரசுகள், பெரிய ஊர்வலங்கள், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்திருப்ப தால், சென்னையில் சென்னை கேசவ பெருமாள் கோவில் தொடங்கி, சென்னை, திருவள்ளூர் வழியாக திருமலை வரை செல்லும், ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும் தவிர்க்கப்படுகிறது.

முன்னதாக, சமர்ப்பிக்கப்பட உள்ள 11 அழகிய வெண் பட்டு திருகுடைகளுக்கும், 19-ந்தேதி பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில், யாக பூஜைகள் நடக்கின்றன. 20-ந்தேதி பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அதனை தொடர்ந்து 22-ந்தேதி திருச்சானூர் தாயார் கோவிலில் 2 திருக்குடைகளும், திருமலை ஏழுமலையான் கோவிலில் 9 திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. அரசின் கட்டுப்பாடு காரணமாக, இந்த 3 ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்கு, திருக்குடை கமிட்டியினர் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இந்த ஆண்டு, திருக்குடை வைபவங்களை பக்தர்கள் தரிசிக்க வசதியாக, 19 மற்றும் 20-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெறும் திருக்குடை சிறப்பு பூஜைகளை, TirupatiKudai மற்றும் rrgopaljee28 என்ற முகநூலிலும், RR. GOPALJEE என்ற யூடியூப் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடியே பக்தர்கள் திருக்குடை பூஜைகளை தரிசிக்கலாம்.மேலும், இந்த ஆண்டு, திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்பட்ட காரணத்தால், வரும் 19-ந்தேதி திருப்பதி திருக்குடை கமிட்டியினர் மற்றும் பக்தர்கள், தங்கள் பகுதியில், அரசின் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி, ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று, ஏழுமலையான் படத்தை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்ய வேண்டும். அன்றைய தினம், ஓம் நமோ நாராயணாய திருநாமத்தை 1,008 முறை உச்சரித்து, பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் பாரத நன்மைக்காக, சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அன்னதானம் பேக்கிங் செய்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post navigation

மறைந்த மனைவிக்கு  முழு உருவச்சிலை வடித்த  மதுரை தொழில் அதிபர்..
தமிழகத்திற்கு கொரோனா நிதியாக மேலும் ரூ.335.41 கோடி விடுவிப்பு…. நிதிஅமைச்சகம்

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer