திருப்பதி:

ந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயில் திருப்பதி கோவிலாகும். இந்த கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கை பணம் ரூ.4 ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்திருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தளத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார். வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும்.

இந்த பிரசித்தி பெற்ற ஸ்தலத்தை திருமலா திருப்பதி தேவஸ்தானம் பெயரில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தினசரி ஆயிரக்கணக்கானோர் ஏழுமலையான தரிசிக்க திருப்பதி வந்து செல்கின்றனர். அவர்கள், செலுத்தும் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகள்  வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திராவில் உள்ள இரண்டு வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

. இதுகுறித்து, திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஏ.கே. சிங்கால் கூறியதாவது,

“திருப்பதி தேவஸ்தான பணத்தை டெபாசிட் செய்ய, பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களிடம் கோரின. இறுதியில், 7 புள்ளி 32 என்ற வட்டி விகிதத்தில் ஆந்திரா வங்கியில் 3 ஆயிரம் கோடி ரூபாயும், 7 புள்ளி 66 என்ற வட்டி விகிதத்தில் இண்டஸ் இண்ட் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது”  எதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.

இதுவரை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வங்கிகளில் ரூ.9, 800 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.