திருப்பதி

ரண்டாம் ஆண்டாகத் திருப்பதி கோவிலில் பக்தர்கள் இன்றி வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் வருடம் தோறும் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கமாகும்.  இதைக் காணத் தினசரி 1 முதல் 3 லட்சம் வரை பக்தர்கள் வந்து 4 மாட வீதிகளில் வீதி உலா வரும் உற்சவ மூர்த்திகளைத் தரிசிப்பதும் வழக்கமாகும். 

சென்ற ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காணமாக திருப்பதியில் பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவம் நடந்தது.   இன்னும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் கூடும் எந்த ஒரு விழாவையும் நடத்தக் கூடாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  திருப்பதி கோவிலில் அக்டோபர் 7 முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.  

இந்த விழாவைப் பக்தர்கள் இல்லாமல் நடத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர்.  சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி விதி உல வரும் வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு தேவஸ்தான தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு நடத்தப்பட உள்ளது. 

அத்துடன் இணையம் மூலம் முன்பதிவு செய்த குறைந்த அளவு பக்தர்களை பிரம்மோற்சவத்துக்கு அனுமதிப்பது குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.