நெல்லை:
மோடியால் குறைக்க முடியாத பெட்ரோல் விலையை ஸ்டாலின் குறைத்துள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே எஸ் அழகிரி, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி வசந்தகுமார் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 ஆண்டுகளாக பெட்ரோல் வரியை மோடியால் குறைக்க முடியாத நிலையில், ஸ்டாலின் அதனைக் குறைத்துள்ளார். இதற்காகக் காங்கிரஸ் கட்சி திமுகவின் ஆட்சியைப் பாராட்டுகிறது எனத் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel