விலையில்லா கறவைப் பசு, ஆடுகள் வழங்கும் திட்டத்திலும்  ஊழல் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Must read

சென்னை:
டந்த அதிமுக ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில்  மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை மீதான மானியக் கோரிக்கையின் போது  பேசிய  கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில், தரமற்ற கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் கடந்த ஆட்சியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

More articles

Latest article