டெல்லி
இந்தியாவின் தூய்மையான காற்றுள்ள நகரங்களில் முதலிடத்தை திருநெல்வேலி பெற்றுள்ளது.

உலகெங்கும் காற்றின் தரம் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக உள்ளது. எனவே ஜனவரி 9 அன்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவை வெளியிட்டது. அந்த தரவில் இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் மற்றும் சுத்தமான காற்றை கொண்ட நகரங்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது.
காற்றுத் தரக் குறியீடு பட்டியலில் சுத்தமான காற்றும் இருக்கும் நகரம் என தமிழகத்தின் திருநெல்வேலி முதலித்தை பிடித்துள்ளது. திருநெல்வேலியில் காற்றுத் தரக் குறியீடு 33 ஆக உள்ளது. 5 ஆம் இடத்தை பிடித்துள்ள தஞ்சாவூரின் காற்றுத் தரக் குறியீடு 47 ஆக உள்ளது.
மேலும் தூய்மையான காற்றின் தரத்தை கொண்ட பட்டியலில், நஹர்லகுன் (அருணாச்சல பிரதேசம்), மடிகேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சாவூர் (தமிழ்நாடு), கொப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரப்பிரதேசம்), ஹூப்பள்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), Chhal (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
காற்று மாசு மாசு அதிகம் உள்ள பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 357 ஆக உள்ளது. அடுத்து காசியாபாத் (உத்தரப்பிரதேசம்), பைர்னிஹாட் (மேகாலயா), சண்டிகர் (சண்டிகர்), ஹாபூர் (உத்தரப்பிரதேசம்), தன்பாத் (ஜார்கண்ட்), பாடி (ஹிமாச்சல பிரதேசம்), கிரேட்டர் நொய்டா (உத்தரப்பிரதேசம்), குஞ்சேமுரா (மகாராஷ்டிரா), நொய்டா (உத்தரப்பிரதேசம்) ஆகிய நகரங்கள் மோசமான காற்று மாசுபாட்டை கொண்டுள்ளன.
[youtube-feed feed=1]