துரை

த்திய அரசு தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் கூறி உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது, மாநில நிர்வாகி அய்யங்காளை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருமாவளவன் தனது பேட்டியில்,

“தமிழக ஆளுநர், அமைச்சர் செந்தில் பாலாஜியை துறையில்லாத அமைச்சரவை பதவியிலிருந்து நீக்கியதாகவும் பின்னர் அதை நிறுத்தி வைப்பதாகவும் கூறியுள்ளார். ஆளுநராகப் பதவி ஏற்ற நாள் முதல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதையும், திரும்பப் பெறுவதையும் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத கவர்னர் ரவியை, திரும்பப் பெற வலியுறுத்துகிறேன் மேலும் தமிழக முதல்வர் இது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் மணிப்பூர் பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.  தமிழக ஆளுநர் நடவடிக்கை குறித்து கலந்தாய்வு செய்ய முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

எனக் கூறி உள்ளார்.