சென்னை

சென்னை மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி காரணமாகச் சென்னை மேடவாக்கத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மாற்றம் மேடவாக்கம் கூட்டுச்சாலை சந்திப்பு முதல் சோழிங்கநல்லூர் சந்திப்பு வரை  செய்யப்பட்டுள்ளது.

இதனால் செம்மொழி சாலை வழியாக தாம்பரம், மாம்பாக்கம் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.   குறிப்பாக மாம்பாக்கம் சாலை, வேளச்சேரி பிரதான சாலை வழியாக தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியை சேர்ந்தவர்களும், அந்த பகுதிகளுக்குச் செல்வோரும் இதை மனதில் கொண்டு செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.