தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6–ந் தேதி நடைபெற இருக்கிறது. நாளை (12ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதிமுக கூட்டணியில் பா.ம.க., பாரதீய ஜனதா, தா.ம.க. உட்பட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக சார்பில் 177 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பா.ம.க.வுக்க 23 தொகுதிகளும், பாரதீய ஜனதாவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு எந்தெந்த தொகுதிகள் என அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம் ஆகிய 5 தோழமை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் போக இன்னும் 9 தொகுதிகளை கைவசம் வைத்துள்ளது.
இந்த நிலையில், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில், அக்கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ள 8 தொகுதிகடிளல் 6 தொகுதிகள் தமாகாவுக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.