போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திருச்சி சிவா எம்.பி.

டில்லி:
டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை, தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

“தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை” சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், வறட்சி நிவாரணம் கேட்டு தொடர்ந்து டில்லியில் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அவப்போது போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, “தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மாநில அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. மத்திய அரசு, இரு மாதங்களாக கண்டுகொள்ளவே இல்லை. அடுத்தபோக சாகுபடிக்கு, மத்திய அரசின் உதவி அவசியம். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்” என்றார்.

அதற்கு திருச்சி சிவா, “விவசாயிகளின் சிரமமான சூழலை முற்றிலும் அறிவேன். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுகிறேன்” என்று கூறினார்.

மேலும் விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது முழு ஆதரவு உண்டு என்றும் தெரிவித்தார்.


English Summary
Tiruchi Shiva M.P shows his support for protesting TN farmers